crazy kirukkal
விதவிதமாய் குரலெழுப்பி
ஏதேதோ பேசுகின்றாய்
யாரென எட்டிப்பார்தால்
மரத்தினிடை ஒளிகின்றாய்
வானளக்கப் பிறந்துள்ளாய்
கீழோன் எனை அஞ்சுவதேன்?
பார்க்கத்தானே விழைகின்றேன்
அதையும் கூடத் தடுப்பது ஏன்?
உன் உலகம் என் வியப்பு
அதைக்காண ஏன் மறுப்பு?
என் உலகும் குறைந்ததில்லை
நீ வந்திருக்கத் தடையும் இல்லை
நீ கூடு கட்டி வாழ்ந்திட
என் கூடத்தில் இடமுண்டு
நீ இரை தேடப்போகையிலே
உன் வீட்டிற்கென் காவலுண்டு
நான் பொங்கி வைக்கும் சோற்றினிலே
உனக்கென்று பங்கு வைத்து
நீ கொத்தித் தின்னும் அழகினை
ரசித்துப் பார்க்கும் எண்ணமுண்டு
எனைக் கண்டு அஞ்சுவதில்
பலன் என்ன கண்டுவிட்டாய்?
தீங்கிழைப்பேன் என நீயும்
எதைக்கண்டு எண்ணிவிட்டாய்?
உலகம் சுற்றும் சிறு சிட்டே
உன் மீது காதல் கொண்டேன்
நான் ஆசை தீர உனைப்பார்க்க
சற்று நெரம் வந்திடு நீ
12 Comments:
Oh I left a big comment and it got disappeared!..
anyway..thanks for dropping in my blog. Good to check out your poems..
Abt jangiri, I followed the same steps as mentioned. It came well.
Since this is jhangiri, it will be soft but surely not like vada.
The hole for piping should not be very wide and cooked over slow heat.
Rest of the things can be followed as such.
if you get time, do try and let me know.
hi, it is really great to see ur comment here. i abandoned my long ago and did not expect any one would drop in. What a surprise:)
உங்கள் கவிதை சந்தத்துடன் மிக அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
@ swami Omkar: thanks a lot for dropping in :)
தமிழ்க்கவிதை. ஓம்கார் சொன்னதுபோல சந்தச்சுவை உண்டு. இனிமைதான்.
ஆயினும், இஃது ஒரு சிட்டை நினைத்து எழுதுவதாகத் தெரியவில்லை.
Here, may I remind you of the principle of literary criticism?
அதாவது, ஒரு கவி தான் எழுதிய கவிதையின் பொருளுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. He or she cant patent it. இதுதான் நான் நினைத்து எழுதினேன் எனச்சொல்லலாம். ஆனால், படிப்பவர் தமக்குப்புரிந்த பொருளை எடுப்பதைக்கண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் எடுக்கும் பொருள் பிடிக்கவில்லையென்றால், ஓரமாக நின்று அழலாம். அவ்வளவுதான்.
இதை தமிழில் ‘தற்கிழமை’ ‘பிறிதின் கிழமை’ எனச்சொல்வர்.
கவிதை எழுதி பிறர் பார்வைக்கு வைக்கும்போது பிறிதின் கிழமை ஆகிறது.
எனக்குப ஏன் பிடிக்கவில்லை இக்கவிதையின் பொருள்?
அதை என் வலைப்பதிவில் சொல்கிறேன்.
Ms Vasanthi!
You need to go places.
Your blog deserves wide readership.
Register yourself in Tamilmanam aggregator.
They register only Tamil blogs. Since present post is a Tamil poem they will allow. Once it comes out, people will have to read your English posts also.
@ Jo: Thanks for dropping in and your nice words.
//உன் உலகம் என் வியப்பு
அதைக்காண ஏன் மறுப்பு?
// nice line ...;)
@ thakkudu pandi: :)
Nice Poem.. Rhythmic too as all have commented.
very nice of u to drop in:)
Hey,
Lovely poem./:)Keep writing more...:)
Dr.Sameena@
http://www.lovelypriyanka.blogspot.com
http://www.myeasytocookrecipes.blogspot.com
Post a Comment
<< Home